மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?
இங்கு காதல் எப்போதும் பேன்டஸியான ஒன்றாக மட்டுமே இருக்கிறது. எதார்த்த வாழ்வில் இருந்து காதல் விலக்கிப் பார்க்கப்படும் சூழலில் மொத ராத்திரி போலான படங்கள் மறைமுகமாக இங்கு நிலவுகிற திருமணம் சார்ந்த சமூக கட்டமைப்பை முற்போக்கு பூச்சுகளுடன் நிறுவ முயற்சி செய்கிறது. எனக்குப் பொதுவாக படங்களைப் பற்றி எழுதுவதில் எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. முதலாவது படங்களுக்கு இங்கு தரப்படுகிற அபரிமிதமான வரவேற்பு. சினிமாவில் வெற்றி பெற்றவர்களே இந்த சமூகத்தின் முகமாக முன்வைக்கப்படுகின்றனர். அதன் செல்வாக்கு அரசியல் வரை…
